/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'இன்கோ' சந்திப்பில் கடை வாகனங்கள் நிறுத்த தடை
/
'இன்கோ' சந்திப்பில் கடை வாகனங்கள் நிறுத்த தடை
ADDED : செப் 28, 2025 10:06 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி கட்டபெட்டு 'இன்கோ' சந்திப்பில் மீண்டும் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் நிறுத்த இடையூறு ஏற்படுகிறது.
கோத்தகிரி - குன்னுார், ஊட்டி வழித்தடத்தில் கட்டபெட்டு இன்கோ சந்திப்பு அமைந்துள்ளது. இவ்வழியாக, சுற்றுலா வாகனங்கள் உட்பட, இதர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருவதால், நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. தவிர, இப்பகுதி பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ் நிறுத்தமாகியும் அமைந்துள்ளது.
இந்நிலையில, சமீப காலமாக, வெளியூர்களில் இருந்து வருபவர்கள், இங்கு 'பார்க்கிங்' இடத்தில் கடைகள் அமைத்து, வியாபாரம் செய்வது தொடர்கிறது. இதனால், சாலையோரங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு, வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில், போலீசார் அபராதம் விதிப்பதும் தொடர்கிறது.
தற்போது, ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் அதிகளவு வந்து செல்வதால், தற்காலிக கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.