/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பார்க்கிங்' தளம் மாற்றம் டிரைவர்கள் குழப்பம்
/
'பார்க்கிங்' தளம் மாற்றம் டிரைவர்கள் குழப்பம்
ADDED : மார் 18, 2024 12:12 AM
ஊட்டி:ஊட்டியில் 'பார்க்கிங்' தளம் திடீரென மாற்றப்பட்டுள்ளதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஊட்டிக்கு, சுற்றுலா வாகனங்கள் உட்பட உள்ளூர் வாகனங்கள் நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சேரிங்கிராஸ் - கமர்சியல் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலீசார் நேற்று முன்தினம் திடீரென எதிர்புறத்தில் வாகனங்களை நிறுத்த உத்தரவிட்டனர்.
இதனால், சுற்றுலா மற்றும் உள்ளூர் வாகன டிரைவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
நீலகிரி எஸ்.பி., சுந்தர வடிவேல் கூறுகையில், ''பொதுமக்களின் கோரிக்கை படி, கமர்சியல் சாலையில் மட்டும் பார்க்கிங் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும்,'' என்றார்.

