/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பகுதி நேர நுாலகம் திறப்பு: வாசகர்கள் மகிழ்ச்சி
/
பகுதி நேர நுாலகம் திறப்பு: வாசகர்கள் மகிழ்ச்சி
ADDED : பிப் 16, 2024 12:29 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே தேவாலா பகுதியில் பகுதி நேர நுாலகம் திறப்பு விழா நடந்தது. அசைன் வரவேற்றார். நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி, துணை தலைவர் நாகராஜ் நுாலக தற்காலிக கட்டடத்தை திறந்து வைத்தனர்.
வாசகர் வட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை வகித்து பேசுகையில், ''தேவாலா பகுதி, 20க்கும் மேற்பட்ட கிராமங்களின்சந்திப்பு பகுதியாக உள்ளது. போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், வாசகர்கள் நுாலகம் செல்ல, 6 கி.மீ. துாரம் உள்ள பந்தலூர் செல்லும் நிலை தொடர்ந்தது.
'தேவாலாவில் நுாலகம் திறக்க வேண்டும்,' என, கடந்த, 20 ஆண்டுகளாக, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது பகுதி நேர நுாலகம் திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 33 புரவலர்கள் சேர்ந்துள்ளனர்,'' என்றார்.
மாவட்ட நுாலக அலுவலர் வசந்த மல்லிகா பேசுகையில், ''ஒவ்வொரு பகுதியிலும் நுாலகங்கள் திறப்பதன் மூலம், எதிர்கால தலைமுறையின் வாழ்க்கை தரம் மேம்படும்,'' என்றார்.
ஆசிரியர் கருணாநிதி தனது சொந்த செலவில், 4,000 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை நுாலகத்திற்கு வழங்கினார். 'செம்மொழி அகாடமி' சார்பில் நுாலக வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. நுாலகத்திற்கு மனு கொடுத்த கார்த்திக் மற்றும் புரவலர்கள், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு வாசகர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.