/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகள்; அகற்றவில்லை எனில் நோய் பரவும் அபாயம்

ADDED : அக் 30, 2024 08:04 PM

கூடலுார் : கூடலுார் சாலையோரங்களில் செழிப்பாக வளர்ந்து வரும், பார்த்தீனியம் செடிகளை அழிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், முதுமலை வனப்பகுதியில் மற்றுமின்றி, கூடலுார் குடியிருப்பு மற்றும் சாலை ஓரங்களில், வன விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன. வட அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த செடிகளின் விதைகள் கண்ணுக்கு தெரியாத மிக சிறிய அளவில் காணப்படும். இவைகள் விளை நிலங்கள், சாலையோரங்களில் செழித்து வளர்கின்றன. இவ்வாறு வளரும்போது பூக்களை அதிகமாக உற்பத்தி செய்து காற்றில் பரவ விடுகின்றன.
இவைகளால் மனிதர்கள், வனவிலங்குகளுக்கு சுவாசம் மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. உடலின் மேல் பட்டால் அரிப்பு போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதன் வளர்ச்சியினால், அப்பகுதியில் வளரக்கூடிய, நம் நாட்டு தாவரங்களும் அழிந்து விடுகின்றன.
வேளாண் உற்பத்தியும் பாதிக்கிறது. இதன் காரணமாக முதுமலை வனப்பகுதியில் இதனை அழிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், வளர்ச்சியை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், கூடலுாரில் குடியிருப்பு, சாலை ஓரங்களில் இந்த செடிகள் அதிகமாக வளர துவங்கி உள்ளன. இவைகளினால் மனிதர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகள் மூலம், இச்செடிகளை அழிக்க வலியுறுத்தி உள்ளனர்.