/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகரில் அதிகரிக்கும் பார்த்தீனியம் செடிகள்; சுவாசம் தொடர்பான நோய்கள் வரும் ஆபத்து

ADDED : ஏப் 01, 2025 09:47 PM

கூடலுார்; கூடலுார் நகர சாலையோரங்களில் அதிகரித்து வரும் பார்த்தீனியம் செடிகளை அகற்ற வலியுறுத்தி உள்ளனர்.
முதுமலை வனப்பகுதியில் பார்த்தீனியம் செடிகள் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் மற்ற தாவரங்கள், புற்கள் வளர்வதில்லை. இதனால், வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம் உள்ளது. மேலும், இந்த செடிகளின் பூக்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் சுவாசம் தொடர்பான நோய்கள், ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. வனத்துறையினர் இவைகளை, அகற்றினாலும் இதன் வளர்ச்சியை முழுமையாக தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், கூடலுார் நகரை ஒட்டியும், குடியிருப்பு பகுதிகளிலும் பார்த்தீனியம் செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இவைகளால் இங்கு உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், 'பார்த்தீனியம் செடிகளால், யாருக்கும் எந்த பயனும் இல்லை.
மாறாக பாதிப்புதான் அதிகமாக உள்ளது. எனவே, இந்த செடிகளை வேரோடு தொடர்ச்சியாக அகற்றி அழிக்க வேண்டும்,' என்றனர்.