/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழுதாகி நின்ற அரசு பஸ் பயணிகள் அதிருப்தி
/
பழுதாகி நின்ற அரசு பஸ் பயணிகள் அதிருப்தி
ADDED : அக் 17, 2025 10:55 PM

கூடலுார்: கூடலுார் கோழிக்கோடு சாலை நந்தட்டி அருகே, அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
கூடலுாரில் இயக்கப்படும் பழைய பஸ்கள் அடிக்கடி சாலையில் பழுதாகி நிற்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது போன்ற பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பந்தலுார் பகுதியிலிருந்து நேற்று காலை பயணிகளை ஏற்றி வந்த அரசு பஸ், நந்தட்டி அருகே, பழுதாகி சாலையோரம் நின்றது. பயணிகள் அதிருப்தி ஆளாகினர்.
தொடர்ந்து, பஸ் நடத்துனர் பயணிகளை அவ்வழியாக வந்த மற்ற அரசு பஸ்களில் ஏற்றி கூடலுார் அனுப்பி வைத்தனர். பழுதான பஸ் சாலையோரம் நின்றதால், வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள், பழுதை நீக்கி எடுத்து சென்றனர்.
பயணிகள் கூறுகையில்,'கூடலுாரில் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், கூலி தொழிலாளர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் போக்குவரத்துக்கு அரசு பஸ்சை நம்பியுள்ளனர். இப்பகுதியில் இயக்கப்படும் பழைய பஸ்கள், அடிக்கடி பழுதாகி சாலையில் நிற்பதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, பழைய பஸ்களுக்கு மாற்றாக புதிய பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.