/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'படம்' காட்டிய பாம்பு அச்சமடைந்த நோயாளிகள்
/
'படம்' காட்டிய பாம்பு அச்சமடைந்த நோயாளிகள்
ADDED : செப் 07, 2025 09:05 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே புஞ்சைவயல் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இதனை ஒட்டி அரசு நடுநிலை பள்ளி, அரசு தொழிற்பயிற்சி மையம், விவசாயிகள் கூட்டமைப்பு கட்டடம் ஆகியவை அமைந்துள்ளன.
இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேரத்தில் தெரு நாய்கள் முகாமிட்டு பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று மதியம் சுகாதார நிலைய வளாகத்தில் நிறுத்தி இருந்த வாகனத்தின் அடியில் கருநாகம் ஒன்று படமெடுத்து நோயாளிகளையும், பணியாளர்களையும் அச்சுறுத்தியது. வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் வருவதற்குள் சுகாதார நிலையத்தை ஒட்டியுள்ள புதருக்குள் சென்று கருநாகம் மறைந்தது. இதனால்,நோயாளிகள் மட்டுமின்றி பணியாளர்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே, சுகாதார நிலையத்தை ஒட்டி உள்ள புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.