பெரியார் நகரில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம்
பெரியார் நகரில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம்
ADDED : ஜூன் 12, 2025 11:38 PM

அ நிறம் | அளவு
கோத்ததிரி; கோத்தகிரி பெரியார் நகரில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியை விட்டு வெளியே வரும் சிறுத்தைகள், குடியிருப்பு பகுதிகளுக்கு உலா வருவது தொடர்கிறது.
இந்நிலையில், கடந்த, மூன்று நாட்களாக, பெரியார் நகர் பகுதியில் உலாவரும் சிறுத்தை, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நடமாடி வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த அச்சத்திற்கு இடையே, வெளியே வருகின்றனர். இரவு நேரத்தில் வெளியில் வருவதை தவிர்த்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். எனவே, அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, குறிப்பிட்ட பகுதியை வனத்துறையினர் ஆய்வு செய்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
