/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவிலுக்குள் புகுந்து பூஜை பொருட்கள் சூறை; கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

ADDED : ஆக 01, 2025 07:46 PM

ஊட்டி; ஊட்டி அருகே துளிதலை கிராமத்தில் முருகன் கோவிலுக்குள் புகுந்த கரடி பூஜை பொருட்களை சூறையாடி சென்றது. ஊட்டி அருகே இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட துளிதலை கிராமத்தில் நுாற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த கிராமத்தில் கரடி ஒன்று சுற்றி திரிந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு வந்த கரடி கதவை உடைத்து உள்ளே சென்று பூஜை பொருட்களை சூறையாடி சென்றது. மறுநாள் கோவிலுக்கு வந்த கிராம மக்கள் கோவில் கதவு உடைக்கப்பட்டு பூஜை பொருட்கள் சூறையாடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊர் தலைவர் ரகுலிங்கன் கூறுகையில், '' கரடி ஒன்று கிராமத்தில் சுற்றித்திரிந்து கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது. கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை சூறையாடி சென்றது.
வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு சென்றனர். கிராம மக்கள் சார்பில் அச்சுறுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், என, வனத்துறைக்கு மனு அளித்துள்ளோம் வனத்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.