/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த பாலம் சீரமைக்காததால் மக்கள் கடும் அதிருப்தி
/
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த பாலம் சீரமைக்காததால் மக்கள் கடும் அதிருப்தி
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த பாலம் சீரமைக்காததால் மக்கள் கடும் அதிருப்தி
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த பாலம் சீரமைக்காததால் மக்கள் கடும் அதிருப்தி
ADDED : ஏப் 15, 2025 09:12 PM

கூடலுார்,; கூடலுார் ஏழுமுறம் சாலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த பாலம் சீரமைக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் மைசூரு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, ஏழுமுறம் கிராமத்துக்கு சாலை பிரிந்து செல்கிறது.
இச்சாலை. மாக்கமூலர அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இச்சாலையை, கிராம மக்கள் மட்டுமின்றி, அவசர தேவைக்கு வெளியூர் மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 2023ல் பெய்த பலத்த மழையின் போது, இவ்வழியாக செல்லும் நீரோடையில் மழை வெள்ளம் ஏற்பட்டு, அதில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால், சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் மண் முட்டைகள் அடக்கப்பட்டு, சிறிய வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் ஆகியும், பாலம் சீரமைக்கவில்லை. மக்கள் கூறுகையில், 'கிராம மக்கள் போக்குவரத்துக்கு இச்சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது.
பாலம் சேதமடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேநிலை நிலை தொடர்ந்தால், வரும் ஜூன் மாதம் துவங்க உள்ள பருவமழையின் போது பாலம் மேலும், சேதம் அடைந்து போக்குவரத்து துண்டிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, சேதமடைந்த பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.