/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்
/
முதுமலை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்
ADDED : அக் 12, 2025 10:14 PM
கூடலுார்; முதுமலை, ஊராட்சி கிராம சபை கூட்டம், முதுகுழி ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், 'கிராம மக்கள் தேவைக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு மின் மோட்டார் இயக்குவதற்காக, மின் துறையினரிடம் மின் இணைப்பு கேட்டு தொகை செலுத்தப்பட்டுள்ளது.
வனத்துறை அனுமதி கிடைக்காததால் பணிகள துவங்கப்படவில்லை. அதேபோன்று, முதுகுழி - கூவகொல்லி சாலையை சீரமைக்க, வனத்துறை அனுமதி மறுத்து வருகின்றனர். எனவே, வனத்துறை நடவடிக்கையை கண்டிப்பதாக கூட்டத்தை புறக்கணிக்கிறோம்,' என, தெரிவித்து சென்றனர்.
தகவல் அறிந்து வந்த கூடலுார் தாசில்தார் முத்துமாரி, மக்களை சந்தித்து பிரச்னை குறித்து கேட்டறிந்தார். எட்டு நாட்களுக்குள் பிரச்னையை பேசி தீர்வு காண்பதாக தெரிவித்தார்.
அவரிடம் மக்கள் கூறுகையில்,'குறிப்பிட்ட காலத்துக்குள் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை எனில், வன அதிகாரி அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.