/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடை கதவை உடைத்த கரடி அம்பிகாபுரத்தில் மக்கள் அச்சம்
/
கடை கதவை உடைத்த கரடி அம்பிகாபுரத்தில் மக்கள் அச்சம்
கடை கதவை உடைத்த கரடி அம்பிகாபுரத்தில் மக்கள் அச்சம்
கடை கதவை உடைத்த கரடி அம்பிகாபுரத்தில் மக்கள் அச்சம்
ADDED : அக் 06, 2025 10:44 PM
குன்னுார்:அம்பிகாபுரம் பகுதியில் கடை கதவை உடைத்த கரடி, பொருட்களை சேதம் செய்து சென்றது.
குன்னுார் உபதலை ஊராட்சி அம்பிகாபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதிகளில், கரடி ஒன்று முகாமிட்டிருந்தது. வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்த நிலையில் கரடி சிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் கரடி வந்துள்ளது. சாலையோரத்தில் உள்ள இஸ்மாயில் என்பவரின் பெட்டி கடையின் கதவுகளை உடைத்து பொருட்களை சேதம் செய்தது.
அப்போது அவ்வழியாக வந்த லாரி டிரைவர் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் கரடி ஓட்டம் பிடித்தது. மக்கள் கூறுகையில்,'வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.