/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஒருவர் காயம்
/
மஞ்சள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஒருவர் காயம்
ADDED : அக் 06, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு மஞ்சள் ஏற்றி வந்த லாரி முதுமலை கார்குடி அருகே, கவிழ்ந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
கர்நாடகாவில் இருந்து, மஞ்சள் ஏற்றி கேரளா செல்லும் லாரி, நேற்று மதியம், 3:00 மணிக்கு, தமிழக -- கர்நாடகா எல்லையான கக்கனல்லாவை கடந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கூடலுார் நோக்கி வந்தது.
கார்குடி அருகே, லாரி கட்டுப்பட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. விபத்தில் லாரி டிரைவர் சுதாகர் காயமடைந்தார். மசினகுடி ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றார். விபத்து குறித்து மசினகுடி போலீசார் விசாரணை நடத்தினர்.