/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீமத் பாகவத ஆன்மிக நிகழ்ச்சிகள் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
/
ஸ்ரீமத் பாகவத ஆன்மிக நிகழ்ச்சிகள் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
ஸ்ரீமத் பாகவத ஆன்மிக நிகழ்ச்சிகள் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
ஸ்ரீமத் பாகவத ஆன்மிக நிகழ்ச்சிகள் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 25, 2025 11:56 PM

பந்தலுார், ; பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடைபெறும், ஸ்ரீமத் பாகவத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் வரும், 30 முதல் மே 6 வரை, ஸ்ரீமத் பாகவத தொடர் ஆன்மிக சொற்பொழிவு நடக்க உள்ளது. இதற்காக கடந்த மூன்று மாதங்களாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் புஷ்கரன் வரவேற்றார். தர்மகர்த்தா பிரபாகரன் மற்றும் ஆசிரியர் ஷஜி தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
மேல் சாந்தி சதீஷ்குமார், பூஜைகளை செய்து பேசுகையில், ''இந்து சமுதாய இளைய தலைமுறையினர் இறை பக்தி மார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இதில், பகவத் கீதையை போன்று, பகவான் திருமாலின், 6 அவதாரங்களையும், 25 கீதைகளையும் உள்ளடக்கி, 36 ஆயிரம் ஸ்லோகங்களில் எழுதப்பட்ட நுாலான பாகவதத்தின் சொற்பொழிவு நடைபெற உள்ளது.
எனவே, தொடர்ச்சியாக, 7 நாட்கள் நடைபெறும் இந்த ஆன்மிக சொற்பொழிவில், பொதுமக்கள் பங்கேற்று இறைவனின் அருள் பெற்று செல்ல வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, முகூர்த்தக்கால் நடப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பொது செயலாளர் உன்னிகிருஷ்ணன், பொருளாளர் சந்தியா மற்றும் கமிட்டி நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் வினோத் நன்றி கூறினார்.