/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
12 கி.மீ. நடந்து வந்து மனு கொடுத்த கிளன்ராக் வனத்தில் வாழும் மக்கள்

ADDED : செப் 12, 2025 08:14 PM

பந்தலுார், ; பந்தலுாரில் நடந்த முகாமில், தங்களின் பல்வேறு குறைகள் குறித்து மனு அளிப்பதற்காக, கிளன்ராக் வனப்பகுதியில் இருந்து, 12 கி.மீ., பழங்குடியின மக்கள் நடந்து வந்தனர்.
பந்தலுார் நகரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. அதில், 'எஸ்டேட் பகுதிகளில், கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்து ஓய்வு பெற்ற நிலையில், குடியிருக்க வீடு இல்லாமல் சிரமப்படுவதாகவும், தங்களுக்கு அரசு தொகுப்பு வீடு வசதி ஏற்படுத்தி தரவும் வேண்டும்,' என, வலியுறுத்தி பல ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மனு அளித்தனர். மேலும், பந்தலுார் இருந்து வனத்திற்கு மத்தியில் குடியிருக்கும், கிளன்ராக் பழங்குடியின கிராம மக்கள், தங்கள் குறைகள் குறித்து மனு அளிக்க, 12 கி.மீ., நடந்து வந்தனர். அதில், ரேசன் அட்டை, மகளிர் உரிமைத்தொகை போன்ற கோரிக்கைகள் குறித்த மனுக்கள் வழங்கப்பட்டன. பழங்குடி மக்கள் கூறுகையில், 'எங்கள் அடிப்படை தேவை களுக்கு பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், இந்த முகாம் வாயிலாக எங்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் வந்தோம்,' என்றனர்.