/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயற்கையை காக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்; அறிவியல் கருத்தரங்கில் தகவல்
/
இயற்கையை காக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்; அறிவியல் கருத்தரங்கில் தகவல்
இயற்கையை காக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்; அறிவியல் கருத்தரங்கில் தகவல்
இயற்கையை காக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்; அறிவியல் கருத்தரங்கில் தகவல்
ADDED : ஜூலை 07, 2025 10:29 PM

கோத்தகிரி; கோத்தகிரி கூக்கல்தொரை மற்றும் குன்னுார் எல்லநள்ளி அரசு உயர்நிலை பள்ளிகளில், வானவில் மன்றம் சார்பில் அறிவியல் கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாவித்திரி மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது:
காலநிலை மாற்றம் மிக கடுமையான பாதிப்பை அடைந்துள்ளதாக, விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். கடந்த, 125 ஆயிரம் ஆண்டுகளில், 2024ம் ஆண்டில்தான் அதிகபட்சமாக, சராசரி வெப்பநிலை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட ஆண்டில் தான் உலகில், 393 இயற்கை பேரிடர்கள் சார்ந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு, 16 ஆயிரத்து, 758 மனித உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில், 41 நாட்கள் அபாயகரமான வெப்ப அளவு உலக வானியல் ஆய்வு கழகத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக, உலகம் முழுவதும், 21.6 கோடி மக்கள் வாழ்வாதாரத்தை தேடி இடம் பெயர்ந்துள்ளனர் என, ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
தற்போது பூமி, 'டிப்பிங் பாயிண்ட்' என்ற நிலையை அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியை பாதுகாக்க உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே நல்ல மாற்றம் ஏற்படும் இவ்வாறு, அவர் பேசினார். அதில், ஆசிரியர்கள் குமார், பரமேஸ்வரன் மற்றும் சாந்தா உட்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியை அமுதமொழி நன்றி கூறினார்.