/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊருக்குள் நுழைந்த யானையால் மக்கள் பீதி
/
ஊருக்குள் நுழைந்த யானையால் மக்கள் பீதி
ADDED : ஏப் 18, 2025 11:55 PM

ஊட்டி: சோலுார் பகுதியில் தேயிலை தோட்டத்தில் சுற்றி திரிந்த யானை தற்போது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
கூடலுார் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள, சோலுார் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில நாட்களாக யானை ஒன்று உலா வருகிறது.
இந்நிலையில், அந்த யானை தற்போது சோலுார் பிக்கைகண்டி கிராமத்திற்குள் இரவு நேரங்களில் புகுந்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் கூறுகையில், ' இப்பகுதியில் யானை உலா வருவதால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். சோலுார் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் புகைப்படம் எடுப்பதற்காக வாகனங்களில் நிறுத்தி ரசிப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

