/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச மருத்துவ முகாமில் மக்கள் பங்கேற்பு
/
இலவச மருத்துவ முகாமில் மக்கள் பங்கேற்பு
ADDED : ஜன 20, 2025 07:08 AM

பந்தலுார் : பந்தலுார் ரோட்டரி கிளப், சுல்தான் பத்தேரி இக்ரா மருத்துவமனை, பந்தலுார் லட்சுமி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமினை நடத்தின.
ரோட்டரி கிளப் தலைவர் யாசின் வரவேற்றார். நிர்வாகி தனராஜ் தலைமை வகித்து நிகழ்ச்சி குறித்து பேசினார்.
இக்ரா மருத்துவமனை அலுவலர் நவாஸ் முன்னிலை வகித்து, இலவச மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள், அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கி பேசினார். முகாமை, பந்தலுார் வியாபாரிகள் சங்க தலைவர் அஸ்ரப் துவக்கி வைத்தார். அதில், பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
டாக்டர்கள் வனிதா, ரேகான், அன்வர், ரசாக் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.