/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதி கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்
/
அடிப்படை வசதி கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 17, 2025 06:53 AM
கூடலுார்: கூடலுார் தேவர்சோலை பேரூராட்சி, 13ம் வார்டு பகுதியில், அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூடலுார் தேவர்சோலை பேரூராட்சி, 13ம் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி, தேவர்சோலை பேரூராட்சி அலுவலகமும் முன், அப்பகுதி மக்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கவுன்சிலர் கிரிஜாஜோஸ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஜெயசீலன் பங்கேற்று ஆதரவளித்தார்.
அதில், '13ம் வார்டுக்கு உட்பட்ட எட்லமூலா -மஞ்சமூலா மண் சாலையை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்; சேதமடைந்துள்ள நம்பலாகோட்டை -மஞ்சமூலா இணைப்பு சாலை, கடம்பூர் சாலை, ஏடலமூலா - பாவனா நகர் இணைப்பு சாலை, தகரமூலா கிராம சாலை யை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, நடந்த பேச்சுவார்த்தையில், சாலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

