/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கரடி அதிகாலையில் தடிகளுடன் தேடிய மக்கள்

ADDED : மார் 18, 2025 04:49 AM

குன்னுார், : ' குன்னுார் 'டென்ட்ஹில்' பகுதியில் நள்ளிரவில் வீட்டு கதவின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்த கரடியை திருடன்,' என, நினைத்து மக்கள் தடிகளுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
குன்னுார் சமீப காலமாக, கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்கு உணவை தேடி வந்து செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில், குன்னுார் டென்ட்ஹில் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீட்டில் நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு கதவை தட்டும் சப்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட வீட்டில் தனியாக இருந்த அவரின் தாயார் ரமாதேவி, அதிர்ச்சி அடைந்து தகவல் அளித்துள்ளார்.
தொடர்ந்து, திருடன் என நினைத்து அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் தடிகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புதர் செடியில் மறைந்திருந்த கரடி குடியிருப்புகள் வழியாக அதிகாலை, 4:20 மணிக்கு நடந்து சென்றது.
நாய்கள் குரைத்து, கரடியை விரட்டி சென்ற சப்தம் கேட்டு, அப்பகுதியில் வீடுகளில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.
மக்கள் கூறுகையில்,' நான்காவது முறையாக கரடி வந்து செல்வதால், கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.