/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகிழ்ச்சியுடன் வந்து சோர்ந்து திரும்பிய மக்கள்! மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் திடீர் உயர்வால் 'அப்செட்'
/
மகிழ்ச்சியுடன் வந்து சோர்ந்து திரும்பிய மக்கள்! மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் திடீர் உயர்வால் 'அப்செட்'
மகிழ்ச்சியுடன் வந்து சோர்ந்து திரும்பிய மக்கள்! மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் திடீர் உயர்வால் 'அப்செட்'
மகிழ்ச்சியுடன் வந்து சோர்ந்து திரும்பிய மக்கள்! மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் திடீர் உயர்வால் 'அப்செட்'
ADDED : மே 15, 2025 11:02 PM

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த, 127வது மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம், 125 ரூபாயாக உயர்த்தியதால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று துவங்கிய, 127 வது மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். வரும், 25ம் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது. நடப்பாண்டின் சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், 275 ரக மலர்கள் வண்ண மயமாக காட்சி அளிக்கின்றன. நடப்பாண்டின் சிறப்பு அம்சமாக, சோழ பேரரசை நினைவு படுத்தம் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.
திடீர் கட்டண உயர்வால் அதிர்ச்சி
இந்நிலையில், மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் திடீரென அதிகரித்தால், குடும்பத்துடன் பல இடங்களில் இருந்தும் வந்த, நடுத்தர மற்றும் ஏழை சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், பெரியவர்களுக்கு, '125 ரூபாய், சிறியவர்களுக்கு, 75, கேமரா, 100 ரூபாய், வீடியோ கேமரா, 500 ரூபாய்,' என, விலை உயர்வு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு, பூங்கா நுழைவு கட்டணம், 50 ரூபாயாக இருந்தது. மலர் கண்காட்சியின் போது, 100 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன்பின், அந்த கட்டணத்தை குறைக்கவில்லை.
அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. இங்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள், நுழைவு கட்டணத்துக்கு பெரும் தொகையை செலவழித்த பின், ரோஜா பூங்கா, படகு இல்ல ஏரி, கர்னாடக தோட்டக்கலை துறை பூங்காவுக்கு செல்ல வேண்டும் எனில், அங்கும் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.
கடும் அதிருப்தியில் பயணிகள்
இதை தவிர, சுற்றுலா தங்கும் விடுதிகள்; உணவு உட்பட பிற செல்வினங்களை கணக்கிட்டால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஊட்டிக்கு சுற்றுலா வருவது என்பது, வரும் காலங்களில், 'கனவாகி' போகும் நிலையில் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், நேற்று காலை நுழைவு கட்டணம் வாங்கி பூங்காவுக்குள் வந்த பயணிகளை, அங்குள்ள புல்வெளிக்குள் அனுமதிக்க மறுத்து, 'உள்ளே அனுமதியில்லை' இல்லை என்ற அறிவிப்பு வைக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து குழந்தைகளுடன் வந்த பல சுற்றுலா பயணிகள், பூங்கா ஊழியர்களிடம் வாக்கு வாதம் செய்து, புல்வெளி பகுதிக்குள் சென்றனர்.
எனவே, பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க தோட்டக்கலை துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.