/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு வேண்டும்; மக்கள் உண்ணாவிரத போராட்டம்
/
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு வேண்டும்; மக்கள் உண்ணாவிரத போராட்டம்
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு வேண்டும்; மக்கள் உண்ணாவிரத போராட்டம்
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு வேண்டும்; மக்கள் உண்ணாவிரத போராட்டம்
ADDED : ஆக 06, 2025 08:51 PM
கூடலுார்; கூடலுார் பாடந்துறை பகுதியில், மக்களை அச்சுறுத்தி வரும் புலி, யானை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வழிவிறுத்தி, மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலுார் தேவர்சோலை அருகே, சர்க்கார் மூல மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், உலா வரும் புலி, கடந்த சில வாரங்களில், 10 மாடுகளை தாக்கி கொன்றது.
மேலும், இப்பகுதியில் இரவில் நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. வனத்துறையினர் கண்காணித்து விரட்டினாலும், தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, பாடந்துறை பகுதியில் நேற்று, உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில், கூடலுார் எம்.எல்.ஏ., ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில், 'மாடுகளை தாக்கி கொன்று மக்களை அச்சுருத்தி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்; இரவில், ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வரும் யானைகள், ஊருக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்; யானைகள் ஊருக்குள் நுழையும் பகுதிகளில் அகழி மற்றும் சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்; பேரூராட்சி பகுதியில், நடைபாதை, சாலை மற்றும் தெருவிளக்குகளை பராமரித்து சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
மக்கள் கூறுகையில்,' இப்பிரச்னைககு தீர்வு கிடைக்கவில்லையேல், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கும்,' என்றனர்.