/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெகதளா பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனு
/
ஜெகதளா பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனு
ADDED : மார் 05, 2024 12:35 AM
ஊட்டி;ஜெகதளா பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தராத, பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தி.மு.க., கவுன்சிலர் பிரமிளா வெங்கடேஷ் தலைமையில், பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட, 11 வது வார்டில், 2,000 மக்கள் வசிக்கின்றனர். கிராமத்திற்கு நடைப்பாதை, குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் உட்பட, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், உயர் அதிகாரிகளுக்கு பல மனுக்கள் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால், பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

