/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதியுடன் புதிய வீடுகள் கேட்டு மனு
/
அடிப்படை வசதியுடன் புதிய வீடுகள் கேட்டு மனு
ADDED : டிச 31, 2025 08:00 AM

கூடலுார்: கூடலுார் செம்பக்கொல்லி ஆதிவாசி கிராம மக்களுக்கு, அடிப்படை வசதிகளுடன் பாதுகாப்பான புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தப்பட்டது.
கூடலுார் செம்பக்கொல்லி சிறப்பு ஆதிவாசி கிராம சபா சார்பாக, மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
கூடலுார் செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில், 7 ஆண்டுகளுக்கு முன், தொகுப்பு வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டது. தொகை குறைவாக இருப்பதாக கூறி பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனால், அங்குள்ள மக்கள் 'தார்பாலின், ஆஸ்பெட்டாஸ் சீட்களில்' தற்காலிக கூரை அமைத்து, அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு, அடிப் படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

