/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி மனு; 40 நாளுக்கு ஒரு முறை தண்ணீர்.. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம்

ADDED : செப் 08, 2025 09:52 PM

ஊட்டி: ஜோதி நகர் மக்கள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி. கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர், மாரியம்மன் கோவில் நகர் பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அருகில் உள்ள ஊற்று நீரை தேடி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஊற்று நீருக்காக வனப்பகுதி இடையே வன விலங்கு நடமாட்டம் இருப்பதால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக சென்ற சிலரை காட்டெருமை தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. கேத்தி பேரூராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கிராமத்தை சேர்ந்த சரோஜா, செபியா கூறுகையில், '' எங்கள் கிராமத்திற்கு, 40 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகிக்கின்றனர். சீராக குடிநீர் வினியோகிக்காததால் கிராம மக்கள் ஊற்றுநீரை தேடி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கேத்தி பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்த திட்டுமிட்டுள்ளோம்,'' என்றார்.