/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணி பழங்குடியினர் பிரச்னைக்கு தீர்வு காண மனு
/
பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணி பழங்குடியினர் பிரச்னைக்கு தீர்வு காண மனு
பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணி பழங்குடியினர் பிரச்னைக்கு தீர்வு காண மனு
பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணி பழங்குடியினர் பிரச்னைக்கு தீர்வு காண மனு
ADDED : டிச 09, 2025 06:19 AM

ஊட்டி: பந்தலுார் அருகே, அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், நடந்து வரும் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு அளித்தார்.
கூடலுார் எம்.எல்.ஏ., ஜெயசீலன் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
கூடலுார் தொகுதிக்கு உட்பட்ட பந்தலுார் வட்டம் குந்தலாடி கிராமம் அருகே உள்ள கடலைகொல்லியில் பழங்குடியின மக்கள், பட்டியல் இன மக்கள், 35 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த, 50 ஆண்டுக்கு மேலாக வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
மேற்கண்ட இடத்தில் சில குடும்பங்களுக்கு, 'மறுவாழ்வு திட்டத்தின் கீழ், அரசின் வாயிலாக பட்டா வழங்கப்பட்ட இடம்,' என்ற அடிப்படையில், கோர்ட் வாயிலாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அந்த இடத்தில், 13 பழங்குடியினர் மற்றும் 7 பட்டியலின குடும்பங்களுக்கு, அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 60 சதவீதம் கட்டுமான பணியும் முடிந்து விட்டது. இந்த சூழ்நிலையில் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் நிருபர்களிடம் கூறுகையில்,'' அங்கு பழங்குடியினர், பட்டியல் இன மக்கள் வசிக்கும் இடம், சில நபர்களுக்கு சொந்தமானது என்ற கோர்ட் தீர்ப்பினால், வீடுகளின் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வாயிலாக மேற்கண்ட இடத்தினை ஆய்வு செய்து, பிரச்னைக்கு தீர்வு கண்டு கிரயம் பெற்று அப்பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடையே உள்ள குழப்பத்தை தீர்க்க வேண்டும்,'' என்றார்.

