/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு
/
அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு
ADDED : நவ 20, 2024 09:55 PM
ஊட்டி; அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காந்திநகர் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
காந்திநகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
ஊட்டி அடுத்துள்ள எப்பநாடு காந்திநகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். கிராம மக்கள் குடியிருந்து வரும் வீடுகளில் மேற்கூரை பெயர்ந்து வீடுகள் மோசமான நிலையில் உள்ளன.
அடிப்படை வசதிகளும் சரிவர இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம மக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.