/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனிதாபிமானம் காட்ட கலெக்டருக்கு மனு
/
மனிதாபிமானம் காட்ட கலெக்டருக்கு மனு
ADDED : செப் 15, 2025 08:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; 'குன்னுாரில் உள்ள நகராட்சி கடைகளை, மனிதாபிமானத்துடன், தீபாவளி முடிந்த பிறகு இடித்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ம.தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சேகர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனு:
குன்னுார் நகராட்சி கடைகள் இடித்துக் கட்டப்பட உள்ளது. திட்டம் நிறைவேற்றுவதில் ஆட்சேபனை இல்லை. எனினும், தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி, மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுத்து, தீபாவளி முடிந்த பிறகு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.