/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமான கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க கலெக்டரிம் மனு
/
சேதமான கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க கலெக்டரிம் மனு
சேதமான கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க கலெக்டரிம் மனு
சேதமான கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க கலெக்டரிம் மனு
ADDED : செப் 15, 2025 09:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; 'ஊட்டி வண்டிசோலை முனீஸ்வரர் கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
ஊட்டியில் கடந்த மாதம் பலத்த காற்றுடன் மழை பெய்த போது, வண்டிச்சோலை பகுதியில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த மரம் விழுந்தது. அதில், ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் சேதமடைந்தது. அந்த கோயிலை புனரமைப்பதற்கு, அங்குள்ள ஒரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, அங்கு ஆய்வு செய்து, கோவிலை புனரமைப்பு செய்து கட்டுவதற்கு தாங்கள் ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.