/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் கொட்டும் மழை; நிரம்பி வழியும் பில்லுார் அணை
/
நீலகிரியில் கொட்டும் மழை; நிரம்பி வழியும் பில்லுார் அணை
நீலகிரியில் கொட்டும் மழை; நிரம்பி வழியும் பில்லுார் அணை
நீலகிரியில் கொட்டும் மழை; நிரம்பி வழியும் பில்லுார் அணை
ADDED : ஜூலை 27, 2025 09:44 PM

மேட்டுப்பாளையம்; நீலகிரி மாவட்டத்தில், கன மழையால், பில்லூர் அணை இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது.
கோவை - நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள, பில்லூர் வனப்பகுதியில், 100 அடி உயரத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. அணையில், 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, பாதுகாப்பு கருதி, அணை நிரம்பியதாக, நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த, 25ம் தேதி இரவு, 7:30 மணிக்கு முழு கொள்ளளவான, 97 அடியை எட்டியது.
நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. அதிகளவில் தண்ணீர் வருவதால், அணை இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது. நேற்று முன்தினம் இரவு அவலாஞ் சியில், 260 மி.மீ., மழையும், அப்பர் பவானியில், 185 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால் பில்லுார் அணைக்கு அதிகபட்சமாக, 15 ஆயிரத்து, 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் தண்ணீரை, அப்படியே திறந்து விட்டனர். இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
வருவாய் துறையினர், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகளின் கரையோர பகுதிகளை, கண்காணிக்கும் படி, ஊராட்சி செயலர்களுக்கு, காரமடை ஊராட்சி ஒன்றிய உயர் அதிகாரிகள், அறிவிப்பு வழங்கி உள்ளனர்.

