/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓவேலியில் 12 பேரை கொன்ற யானைக்கு சிறை; சுற்றுப்புற பகுதியில் 12 நவீன கேமராக்கள் பொருத்த திட்டம்
/
ஓவேலியில் 12 பேரை கொன்ற யானைக்கு சிறை; சுற்றுப்புற பகுதியில் 12 நவீன கேமராக்கள் பொருத்த திட்டம்
ஓவேலியில் 12 பேரை கொன்ற யானைக்கு சிறை; சுற்றுப்புற பகுதியில் 12 நவீன கேமராக்கள் பொருத்த திட்டம்
ஓவேலியில் 12 பேரை கொன்ற யானைக்கு சிறை; சுற்றுப்புற பகுதியில் 12 நவீன கேமராக்கள் பொருத்த திட்டம்
UPDATED : செப் 28, 2025 11:17 PM
ADDED : செப் 28, 2025 10:03 PM

கூடலுார்,; 'கூடலுார் ஓவேலி உட்பட பல பகுதிகளில், நவீன கேமராக்களை பொருத்தி, காட்டு யானைகளை கண்காணித்து, தடுக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்,' என, வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
கூடலுாரில் காட்டு யானைகள், ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. யானை தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, காட்டு யானைகளை ஊருக்குள் நுழையும் முன்பு கண்டறிந்து, விரட்டும் வகையில், வனத்துறை சார்பில், 6 கோடி ரூபாய் செலவில், செயற்கை நுண்ணறிவு கேமரா உதவியுடன் புதிய திட்டத்தை உருவாக்கி வருகின்றனர்.
இதற்காக, ஊசிமலையில் 'வயர்லெஸ் ரிப்பீட்டர்ஸ்' சென்டர், நாடுகாணி ஜீன்பூல் தாவரம் மையத்தில் கட்டுப்பாட்டு அறை, 35 இடங்களில் சோலார் மின் வேலியுடன் கூடிய முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில், 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓவேலி பகுதியில் கடந்த சில ஆண்டுகளில், 12 பேரை தாக்கி கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற யானையை, வனத்துறையினர், 23ம் தேதி மயக்க ஊசி செலுத்தி, முதுமலை அபயாரண்யம் யானைக்குள் முகாமில் உள்ள கராலில் அடைத்துள்ளனர். இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், 'மீண்டும் இங்கு காட்டு யானைகள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''இத்திட்டத்தில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த மாதம் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. இதன் மூலம், ஓவேலி உட்பட பல பகுதிகளில் வனவிலங்கு ஊருக்குள் நுழையாமல் முன்னெச்சரிக்கையாக தடுக்க முடியும். யானை -மனித மோதல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,'' என்றார்.