/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்த செடிகள்: விபத்து அபாயம்
/
தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்த செடிகள்: விபத்து அபாயம்
தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்த செடிகள்: விபத்து அபாயம்
தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்த செடிகள்: விபத்து அபாயம்
ADDED : அக் 24, 2025 11:34 PM

கூடலூர்: கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை உள்ளூர் வாகனங்கள் தமிழக, கேரளா, கர்நாடகா அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையில், கூடலூர் - நடுவட்டம் இடையே அதிக வளைவுகளை கொண்டுள்ளது. விபத்துக்களை தவிர்க்க, நடுவட்டத்திலிருந்து கீழ் நோக்கி வரும் வாகனங்களை இரண்டாவது கியரில், இயக்க போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் விபத்துக்கள் ஓரளவு குறைந்துள்ளது.
இந்நிலையில், பருவமழையை தொடர்ந்து, நடுவட்டம் - கூடலூர் சாலையோரங்களில் போக்குவரத்துக் இடையூறாக அதிகளவில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், இச்சாலையில வாகன விபத்துக்கள் ஆபத்து உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன், இவைகளை அகற்ற வலியுறுத்தியுள்ள னர்.