/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் வளர்ந்து வரும் செடிகள்: விபத்து அபாயம்
/
சாலையோரம் வளர்ந்து வரும் செடிகள்: விபத்து அபாயம்
ADDED : ஏப் 14, 2025 06:47 AM

கூடலுார்: கூடலுாரில் தொடரும் மழையை தொடர்ந்து, சாலையோரங்களில் வளர்ந்து வரும் செடிகளால், வாகன விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலூர் பகுதி, கேரளா, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. சாலை வளைவுகளில் விபத்துகளை தவிர்க்க வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
கோடை மழையை தொடர்ந்து, சாலையோரங்களில் செடிகள் அதிக அளவில் வளர துவங்கியுள்ளன.
இவைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன், வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'பெரும்பாலான பகுதிகளில் சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள செடிகள் முட்புதர்கள் அகற்றப்படுவதில்லை. கோடைமழையை தொடர்ந்து, சாலை ஓரங்களில் செடிகள் அதிகளவு வளர துவங்கியுள்ளன. இதனால், மக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
'இப்பகுதிகளில் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதுடன், வாகன விபத்துகள் ஆபத்து உள்ளது. கோடை விடுமுறை, வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பை கவனத்தில் கொண்டு, சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

