/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
/
பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
ADDED : பிப் 06, 2025 08:30 PM
கூடலுார்; கூடலுார் நாடுகாணி சோதனை சாவடியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து தொடர்பாக, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுற்றுலா பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தின், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்துள்ளனர்.
வெளி மாநிலங்களில் இருந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் எடுத்து வருவதை தடுக்க, கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில், தற்காலிக பணியாளர்களை நியமித்து, வாகனங்களில், பிளாஸ்டிக் சோதனை செய்த பின் அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில் பிளாஸ்டிக் பரிசோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
கேரளாவில் இருந்து, நாடுகாணி வழியாக நீலகிரி வரும் சுற்றுலா வாகனங்களை, நாடுகாணியில் சோதனை செய்து தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். சோதனை சாவடியில் உள்ள போலீசாரும் வாகனங்களை சோதனை செய்து, பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனத்தை, போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
அப்போது சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'நீலகிரியில் பிளாஸ்டிக் தடை குறித்து எங்களுக்கு தெரியாது. எனவே, தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யக் கூடாது,' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்து தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்து. 200 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

