/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியை துாய்மையாக வைக்க உறுதிமொழி
/
கோத்தகிரியை துாய்மையாக வைக்க உறுதிமொழி
ADDED : ஜன 16, 2025 03:58 AM
கோத்தகிரி: கோத்தகிரியை துாய்மையாகவும், பசுமையாகவும் வைக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கோத்தகிரி பேரூராட்சி, மாவட்டத்திலேயே சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த பேரூராட்சி சமீபத்தில், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்குள்ள, 21 வார்டுகளில் இருந்து வெளியேறும் குப்பைகள், வளம் மீட்பு பூங்காவில் மறு சுழற்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக, குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு, குப்பைகள் சிறந்த முறையில் கையாளப்படுகிறது. கோத்தகிரி நகரை துாய்மையாகவும், பசுமையாகவும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், பேரூராட்சி வளாகத்தில், துாய்மை பணிக்கு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை வசித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகமது ரிஸ்வான், உறுதிமொழி வாசிக்க, அனைவரும் ஏற்று கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

