/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாடு பகுதியில் சிக்கிய வேட்டை கும்பல் - தமிழக எல்லையில் கண்காணிப்பு அவசியம்
/
வயநாடு பகுதியில் சிக்கிய வேட்டை கும்பல் - தமிழக எல்லையில் கண்காணிப்பு அவசியம்
வயநாடு பகுதியில் சிக்கிய வேட்டை கும்பல் - தமிழக எல்லையில் கண்காணிப்பு அவசியம்
வயநாடு பகுதியில் சிக்கிய வேட்டை கும்பல் - தமிழக எல்லையில் கண்காணிப்பு அவசியம்
ADDED : ஜன 02, 2025 12:49 AM

பந்தலுார், ; நீலகிரி எல்லையை ஒட்டிய கேரளா வயநாடு பகுதியில் வேட்டை கும்பல் சிக்கி உள்ள நிலையில், தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்ட எல்லையான முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, கேரளா மாநிலம் வயநாடு பொன்குழி பகுதி அமைத்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் வேட்டை கும்பல் அடிக்கடி நடமாடி வருவதாக வயநாடு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது வனப் பகுதிக்குள் சிலர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
அவர்களை பிடித்த வன குழுவினர் சோதனை செய்தபோது, அவர்களிடம் மான் இறைச்சி மற்றும் துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து மான் இறைச்சி மற்றும் அவற்றின் உடல் பாகங்கள், மூன்று நாட்டு துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியை சேர்ந்த பாபுமோன்,42, பாலுச்சேரியை சேர்ந்த ரஞ்சித், 31, காட்டுக்குளம் பகுதியை சேர்ந்த அனீஸ், 22, திருச்சலேரியை சேர்ந்த சந்திரன்,24, பிரகாஷ்,23, ஆகியோரை கைது செய்தனர்.
தமிழக எல்லையோர வனப்பகுதியை ஒட்டிய, கேரளா மாநிலத்தில் வேட்டை கும்பல் தொடர்ந்து வன விலங்குகளை வேட்டையாடி வரும் நிலையில், தமிழக எல்லையோர வனப்பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.