ADDED : ஜன 05, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: ஆறாம் வகுப்பு மாணவனை, மது கொடுத்து, இயற்கைக்கு மாறான சித்திரவதை செய்த வழக்கில் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மலம்புழா தொகுதிக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரி யர் அனில் 40. இவர் நவ., 29ம் தேதி பழங்குடியின பிரிவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவனை, தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று, மது அளித்து இயற்கைக்கு மாறான சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளார்.
நடந்தது குறித்து மாணவன் சக மாணவர்களிடம் தெரிவித்ததையடுத்து, சம்பவம் வெளியே தெரிந்தது. சம்பவம் குறித்து, மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த மலம்புழா போலீசார் விசாரணை நடத்தி, அனிலை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

