/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் -- ஊட்டி சாலையில் விரிசல்: நிலச்சரிவு அபாயம்
/
குன்னுார் -- ஊட்டி சாலையில் விரிசல்: நிலச்சரிவு அபாயம்
குன்னுார் -- ஊட்டி சாலையில் விரிசல்: நிலச்சரிவு அபாயம்
குன்னுார் -- ஊட்டி சாலையில் விரிசல்: நிலச்சரிவு அபாயம்
ADDED : ஜன 05, 2026 05:28 AM

குன்னுார்: குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் காணப்படும் விரிசலால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
குன்னுாரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கன மழையால், 16 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இது மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் சிறிய மண்சரிவுகள் ஏற்பட்டன.
இந்நிலையில், மழையின் தாக்கம் குறைந்துள்ளத. நேற்று குன்னுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், கன்டோன்மென்ட் மருத்துவமனை அருகே கோவில் வளைவு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழியும் சரிவர மூடப்படவில்லை. இதனால், மழை நீர் தேங்கி சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது. அதில், வாகனங்கள் சிக்கி பள்ளத்தில் கவிழாமல் இருக்க வெலிங்டன் போலீசார் சார்பில், பேரிகாட் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. அருகில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட லாரியால், வளைவில் விபத்து அபாயம் உள்ளது.
நேற்று முன்தினம் ஊட்டி சாலை மற்றும் டி.டி.கே. சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் காலை நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, சிம்ஸ் பார்க் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
மக்கள் கூறுகையில், 'குன்னுார்- - ஊட்டி சாலையில் தடுப்பு சுவர் பகுதிகளில் கேபிள் பதிக்க தோண்டப்பட்டு, மூடப்படாமல் உள்ள குழிகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்,' என்றனர்.

