/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நுாலக வார விழாவில் கவியரங்கம்; உள்ளூர் வாசகர்கள் மகிழ்ச்சி
/
நுாலக வார விழாவில் கவியரங்கம்; உள்ளூர் வாசகர்கள் மகிழ்ச்சி
நுாலக வார விழாவில் கவியரங்கம்; உள்ளூர் வாசகர்கள் மகிழ்ச்சி
நுாலக வார விழாவில் கவியரங்கம்; உள்ளூர் வாசகர்கள் மகிழ்ச்சி
ADDED : நவ 22, 2025 05:01 AM

கோத்தகிரி: கோத்தகிரி கிளை நுாலகத்தில், 58 வது தேசிய நுாலக வார விழாவையொட்டி கவிஞர்கள் கவி பாடியது, வாசகர்களை கவர்ந்தது.
கோத்தகிரி கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், 58வது தேசிய நுாலக வார விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, வாசகர் வட்ட தலைவர் கோபால் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் பரமேஷ் பெள்ளன் முன்னிலை வகித்தார்.
கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) முதல்வர் முனைவர் சேகரன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில், ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன.
அதன் ஒரு நிகழ்வாக, கவிஞர் விவேராஜூ தலைமையில், சிறப்பு கவியரங்கம் நடந்தது. அதில், எழுத்தாளர் முனைவர் சுனில் ஜோகி, கவிஞர்கள் லிங்கன், பிரேம் சுரேஷ், நாகராஜ், மூர்த்தி மற்றும் நிர்மலா ஆகியோர் கவி பாடினர்.
இதனை, வாசகர் வட்ட நிர்வாகிகள், வாசகர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

