/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாய நிலத்தில் 'பொக்லைன்' இயக்கம்; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி
/
விவசாய நிலத்தில் 'பொக்லைன்' இயக்கம்; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி
விவசாய நிலத்தில் 'பொக்லைன்' இயக்கம்; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி
விவசாய நிலத்தில் 'பொக்லைன்' இயக்கம்; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 25, 2025 08:35 PM

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் பொக்லைன் உதவியுடன் விவசாய நிலம் சமன் செய்யப்பட்டு வருவது சர்சையை கிளப்பி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், '284 இடங்கள் நிலச்சரிவு ஏற்படக்கூடியவை,' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்தி, விவசாய நிலங்களை சமன் செய்ய கூடாது என்ற நிபந்தனை உள்ளது.
இதனையும் மீறி, பல்வேறு பகுதிகளில், இரவு மற்றும் பகல் நேரங்களில், விவசாய நிலங்களில், அத்துமீறல் நடந்து வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, கட்டபெட்டு பங்களோரை பகுதியில், பொக்லைன் உதவியுடன், விவசாய நிலத்தில், கட்டுமானத்திற்காக, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை தடுக்க, சூழல் ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கட்டபெட்டு பகுதியில், இரண்டு நாட்களாக, பொக்லைன் பயன்படுத்தி, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்த பணி மேற்பார்வையாளர் கூறுகையில், 'இப்பணிக்கான அனுமதி, மாவட்ட நிர்வாகத்திடம் பெறப்பட்டுள்ளது,' என்றார்.
கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில்,'' அப்பகுதியில் ஆய்வு செய்து, அனுமதி பெற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.