/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சமூக வலைதளங்களில் போலி ஐ.டி., வேண்டாம் மாணவியருக்கு போலீசார் 'அட்வைஸ்'
/
சமூக வலைதளங்களில் போலி ஐ.டி., வேண்டாம் மாணவியருக்கு போலீசார் 'அட்வைஸ்'
சமூக வலைதளங்களில் போலி ஐ.டி., வேண்டாம் மாணவியருக்கு போலீசார் 'அட்வைஸ்'
சமூக வலைதளங்களில் போலி ஐ.டி., வேண்டாம் மாணவியருக்கு போலீசார் 'அட்வைஸ்'
ADDED : மார் 21, 2025 02:54 AM
குன்னுார்:குன்னுார் சாந்தி விஜய் மேல்நிலை பள்ளியில், இளம் தலைமுறையினருக்கான, நல்வழி காட்டுதல் மற்றும் போக்சோ விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பள்ளி தாளாளர் லட்சுமி சந்த், கவுதம் மேற்பார்வையில் நடந்த இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் (ஓய்வு) வைரமணி தலைமை வகித்தார்.
குன்னுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஷர்மி பேசுகையில்,''தற்போது மொபைல் போன் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனால் பல்வேறு கலாசார சீரழிவுகள் அதிகரித்து வருவதை தடுக்க வேண்டியது இளம் தலைமுறையினரின் கடமை. பள்ளிகளில் ஆசிரியர்கள் மொபைலில் வீட்டு பாடங்கள் அனுப்புவதாகவும், அதனை வைத்து படிப்பதாகவும் பொய்யான காரணங்களை பெற்றோரிடம் கூறி தவறான வழிகளுக்கு மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். பெற்றோர் கண்காணிப்பதுடன், ஆசிரியர்களிடமும் பேச வேண்டும். இவ்வாறு ஷர்மி பேசினார்.
கான்ஸ்டபிள் ஜெஸ்லியா பேசுகையில், ''வளரிளம் பருவத்தில் பாய் பிரண்ட் என கூறி பேசி, பல்வேறு பிரச்னைகளில் மாணவியர் சிக்கி தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். தற்போது, சமூக வலைதளங்களில், போலியாக ஐ.டி., தயாரித்து மாணவிகள் தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து, பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, எதிர்கால வாழ்க்கையை நாசம் செய்ய காரணமாகின்றனர். படிக்க வேண்டிய இந்த காலத்தில் படிப்புக்கும், விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பெற்றோருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்க மாணவியர் முன்வர வேண்டும்,'' என்றார்.
அனைவரும் மொபைல் போனில் 'காவலன் ஆப்' பதிவிறக்கம் செய்யவும், திடீர் பிரச்னை ஏற்படும் போது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் வந்து தீர்வு காண்பது மற்றும் போக்சோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ஆசிரியர்கள், மாணவியர், பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.