/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு: இளம் பெண்ணுக்கு போலீஸ் வலை
/
மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு: இளம் பெண்ணுக்கு போலீஸ் வலை
மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு: இளம் பெண்ணுக்கு போலீஸ் வலை
மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு: இளம் பெண்ணுக்கு போலீஸ் வலை
ADDED : அக் 26, 2025 08:55 PM
ஊட்டி: ஊட்டியில், தனியாக இருந்த மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறித்து சென்ற சம்பவம் பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.
ஊட்டி எச்.எம்.டி., பகுதியில் வசிக்கும் சிக்கியம்மாள், 80, கணவர் இறந்து விட்டதால் அவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். சரியாக கண் பார்வை தெரியாததால் அவரால் வீட்டு வேலைகளை செய்ய முடியாது என்பதால் அவருடைய உறவினர்கள் அவ்வப்போது சென்று வீட்டு வேலைகளை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டு வேலை இருக்கிறதா என்று கேட்டு இளம்பெண் ஒருவர் மூதாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் அனைத்து வேலைகளையும் நன்றாக செய்து கொடுப்பேன் என்றும் நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்வேன் என்றும் அந்த இளம் பெண் கூறியுள்ளார். இளம் பெண்ணுக்கு காபி கொண்டு வருவதற்காக சிக்கியம்மாள் சமையலறைக்கு சென்ற போது, வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட பெண் காபி குடித்து முடித்துவிட்டு மூதாட்டியின் கண்ணில் மிளகாய் பொடி தூவி அவரது கழுத்தில் இருந்த, 4 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு கதவை பூட்டி விட்டு சென்று விட்டார்.
சில நிமிடங்கள் கழித்து மாடிக்கு வந்து சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பாட்டியை கீழே அழைத்து வந்த போது நகை பறிப்பு சம்பவத்தை பொதுமக்களிடம் தெரிவித்தார்.
ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணை அடையாளம் காண்பதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஒவ்வொன்றாக போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

