/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற பள்ளி மாணவன்
/
தேசிய குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற பள்ளி மாணவன்
தேசிய குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற பள்ளி மாணவன்
தேசிய குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற பள்ளி மாணவன்
ADDED : அக் 26, 2025 08:55 PM

கோத்தகிரி: கோத்தகிரி பள்ளி மாணவன் தேசிய அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
கோத்தகிரி பெட்டட்டி கிராமத்தை சேர்ந்த, மணிகண்டன் என்பவரது மகன் சாஷ்வத், தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். சிறு வயது முதலே, அதே பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவரிடம், குத்துச்சண்டை பயிற்சி பெற்று, மாநில மற்றும் தேசிய அளவில் பங்கேற்று சாதித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய பிரதேஷ் மாநிலம் ஜபல்பூரில், எஸ்.ஜி.எப்.ஐ., நடத்திய தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், தமிழ்நாடு அணிக்காக பங்கேற்றார். இவர், 17 வயதுக்கு உட்பட்ட, 46 முதல் 48 கிலோ எடை பிரிவில், காலிறுதியில் தெலுங்கானா அணியையும், அரை இறுதியில் வடக்கு மண்டல அணியையும், இறுதி போட்டியில் மகாராஷ்டிரா வீரரையும் தோற்கடித்து தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்று தங்கப்பதக்கம் பெற்றார். இளம் குத்துச்சண்டை வீரர் சாஷ்வத் மற்றும் பயிற்சியாளர் அப்பாஸ் ஆகியோருக்கு, விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

