/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏக்குணி சாலையில் விதிகளை மீறும் வாகனங்கள் விபத்து அபாயத்தால் போலீஸ் எச்சரிக்கை
/
ஏக்குணி சாலையில் விதிகளை மீறும் வாகனங்கள் விபத்து அபாயத்தால் போலீஸ் எச்சரிக்கை
ஏக்குணி சாலையில் விதிகளை மீறும் வாகனங்கள் விபத்து அபாயத்தால் போலீஸ் எச்சரிக்கை
ஏக்குணி சாலையில் விதிகளை மீறும் வாகனங்கள் விபத்து அபாயத்தால் போலீஸ் எச்சரிக்கை
ADDED : நவ 11, 2024 06:45 AM

ஊட்டி : 'கல்லட்டி-- ஏக்குணி சாலையில் டிவைடரை தாண்டி விதிமீறி வலப்புறம் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஊட்டியில் இருந்து கல்லட்டி சாலை வழியாக ஏக்குணி, மாயார், மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ், இலகு ரக வாகனங்கள் சென்று வருகின்றன.
செங்குத்தான சாலையில் அதிக கொண்டை ஊசி வளைகள் இருப்பதால், சுற்றுலா வாகனங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏக்குணி சாலையில் கீழிருந்து மேல்புறம் மற்றும் மேல்புறத்திலிருந்து கீழ்புறம் செல்லும் வாகனங்கள் சரியான பாதையில் சென்று வரும் வகையில், ஏக்குணி பஸ் ஸ்டாப் பகுதியில் செல்லும் சாலையில், போலீசார் டிவைடர் அமைத்து போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால், மேலிருந்து கீழ் நோக்கி வரும் வாகனங்கள் இடப்புறமாக செல்லாமல் டிவைடரை தாண்டி விதிமீறி வலப்புறம் செல்கின்றன. இதனால், கீழ் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில்,'இச்சாலையில் பல கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால், அனுபவம் இல்லாமல் வாகனம் ஓட்டும் டிரைவர்களால் பல விபத்துகள் நடந்துள்ளன. பல உயிர்கள் பலியாகி உள்ளன. இதை தொடர்ந்து, இந்த சாலையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல, 5 ஆண்டுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. மேலும், வாகன விபத்தை தவிர்க்க, சாலைகளில் போதிய அளவில், விழிப்புணர்வு அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. எனினும் பலர் விதிகளை மிறி வருகின்னர். போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். விதி மீறினால் சட்டத்தின் படி அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.