/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் விழா போட்டி: அசத்திய மாணவியர்
/
பொங்கல் விழா போட்டி: அசத்திய மாணவியர்
ADDED : டிச 01, 2024 10:36 PM

பந்தலுார்; நீலகிரி மாவட்ட தமிழ் சங்கத்தின், 24 ஆம் ஆண்டு விழா வரும் ஜன., மாதம் நடைபெற உள்ளது.
இதற்காக மாணவர்கள் மத்தியில் இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், பந்தலுார் தாலுகா அளவிலான போட்டிகள், புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. சங்க மூத்த உறுப்பினர் ஜெகநாதன் தலைமை வகித்தார். தமிழ் சங்க செயலாளர் ஆசிரியர் நாகநாதன் வரவேற்றார். தலைவர் மணிவண்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
அதில், பொங்கல் விழா குறித்த பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும், கிராமப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில், மாணவ, மாணவியர் மத்தியில் நடன போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்ச்சங்க விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சங்க நிர்வாகி வக்கீல் கணேசன் தலைமையில், நிர்வாகிகள் தியாகராஜன், ராமமூர்த்தி, மணிவாசகம்,ரமேஷ், கலைச்செல்வன், ஸ்ரீகாந்த் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.