/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் விழா போட்டி; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
/
பொங்கல் விழா போட்டி; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
பொங்கல் விழா போட்டி; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
பொங்கல் விழா போட்டி; மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
ADDED : ஜன 07, 2025 01:52 AM

பந்தலுார்; பந்தலுாரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் விழா நடந்து வருகிறது.
ஐந்தாம் ஆண்டு பொங்கல் விழா வரும், 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், திருக்குறள் ஒப்புவித்தல், கவிதை போட்டிகள் நடந்தது.
பந்தலுார் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மன்ற ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை வகித்தார். பொருளாளர் குமார், செயலாளர் முரளி, கார்த்தி மற்றும் வினோத் ஆகியோர் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தனர். தொடர்ந்து நடந்த போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
அதில், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரும், 16ம் தேதி பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் நடுவர்களாக நுாலகர் அறிவழகன், ஆசிரியர்கள் சீதாலட்சுமி, முத்துலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ரவிச்சந்திரன், சாந்தி, செல்வி, மல்லிகா, இலக்கியா,லலிதா, விக்னேஷ்வரி உள்ளிட்டோர் பலர் செய்திருந்தனர்.