ADDED : ஜன 08, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;ஆனைகட்டி அருகே உள்ள கோபனாரியில் நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை சார்பில், பொங்கல் விழா நடந்தது.
நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை ஏழை, எளிய மற்றும் மலைவாழ் மக்களுக்கு கடந்த, 35 ஆண்டுகளாக சமூக மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பு சார்பில், கோபனாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள நபார்டு கிராம சந்தை வளாகத்தில் பொங்கல் விழா நடந்தது.
விழாவில், பங்கேற்ற பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு புத்தாடையும், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. விழாவில், அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சங்கரநாராயணன், அரிமா சங்க ஆளுநர் ராம்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.