/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்லுாரி அருகே பள்ளம்! கூடலுார் கோழிப்பாலம் பகுதியில் மழைநீரால் பாதிப்பு... விரைவில் சீரமைக்க நடவடிக்கை இல்லையேல் அபாயம்

ADDED : ஜூலை 29, 2025 08:02 PM

கூடலுார்; கூடலுார் அரசு கல்லுாரியை ஒட்டிய இடத்தில், மழை நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு உருவாகியுள்ள பெரிய பள்ளத்தால் நிலச்சரிவு அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. கூடலுார் கோழிப்பாலம் பகுதியில், அரசு கலை, அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெரும்பாலான கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு வசதி இல்லை.
அதேபோன்று, கல்லுாரி வளாகத்தில் மழை நீர் வழிந்தோட பாதுகாப்பான மழை நீர் கால்வாய்களும் அமைக்கப்படவில்லை. பருவமழை காலங்களில், கல்லுாரி வளாகத்தில் ஏற்படும் மழை நீர் தாழ்வான பகுதிகளில் வழிந்தோடுகிறது.
இதனால், கல்லுாரி சுற்றியுள்ள பல இடங்களில், மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், கல்லுாரி விளையாட்டு மைதானத்தை ஒட்டி மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைத்துள்ளனர். ஆனால், மழை நீர் வழிந்தோட, சரியான கால்வாய் வசதி அமைக்கவில்லை. இதன் வழியாக, வழிந்தோடும் மழை நீர், அங்குள்ள தனியார் தேயிலை தோட்டம் வழியாக, கூடலுார்- கோழிக்கோடு சாலைக்கு செல்கிறது.
பெரியளவிலான பள்ளம் பல ஆண்டுகளாக, இவ்வழியாக மழைநீர் செல்வதால், தனியார் தேயிலை தோட்ட பகுதியில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லாததால், தற்போது அப்பகுதியில் பெரியளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், தொடரும் மண் அரிப்பால் தடு ப்பு சுவரின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பள்ளம் மேலும் அதிகரித்து, கூடலுார்- கோழிக்கோடு சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. உள்ளூர் மக்கள் கூறுகையில், ' இங்கு அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2000 மாணவர்கள் படிக்கும் கல்லுாரியில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதற்காக பெற்றோர் குரல் கொடுத்தும் பயனில்லை. எனவே, அரசு அதிகா ரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.
கூடலுார் தாசில்தார் முத்துமாரி கூறுகையில், '' குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான பணிகள் செய்யப்படும்,'' என்றனர்.