சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்கள்: வாகனகள் செல்வதில் சிரமம்
சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்கள்: வாகனகள் செல்வதில் சிரமம்
UPDATED : நவ 05, 2026 11:51 PM
ADDED : நவ 04, 2026 06:17 PM

கூடலுார்:
கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்களால் வாகன விபத்துகள் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார்– மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி, தமிழக, கேரளா, கர்நாடகா சென்று வருகின்றன. கர்நாடக மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் இவ்வழியாகவே நீலகிரிக்கு வந்து செல்கின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகம் வழியாக வாகனங்கள் செல்ல இரவு, 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக, விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா வாகனம் வருகை அதிகமாக காணப்படும்.
இச்சாலையில், மரப்பாலம் முதல் மாக்கமூலா வரை சாலையோரங்களில் இரு புறமும் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. அதில், சாலையோரம் இரும்பு தடுப்புகளும் மறைந்துள்ளன. இதனால், வாகன போக்குவரத்துக்கும், மக்கள் நடந்து செல்லவும் இடையூறாகவும், விபத்துகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
