தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/‘தாட்கோ’ வாயிலாக மானியம்: மின் இணைப்பு பெற அழைப்பு

‘தாட்கோ’ வாயிலாக மானியம்: மின் இணைப்பு பெற அழைப்பு

‘தாட்கோ’ வாயிலாக மானியம்: மின் இணைப்பு பெற அழைப்பு


UPDATED : நவ 05, 2026 11:47 PM

ADDED : நவ 04, 2026 06:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:47 PM ADDED : நவ 04, 2026 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நடப்பாண்டின் பட்ஜெட்டில் வளமிகு வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்தவும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாய வருமானத்தை உயர்த்தவும் வழி வகை செய்யப்படுகிறது.

விவசாய உற்பத்திக்கு தேவைப்படும் மின் மோட்டார் குதிரை திறனுக்கு ஏற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் , 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திடம் ‘தாட்கோ’ மானியமாக வழங்கும்.

மானிய உதவி



அதன்படி , 5 எச்.பி மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் , 2.50 லட்சம் ரூபாயில், பயனாளி, 25 ஆயிரம் ரூபாய் மட்டும் பங்குத் தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள, 2.25 லட்சம் ரூபாய் தாட்கோ வாயிலாக மானியமாக வழங்கப்படும்.

7.5 எச்.பி. , மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் , 2.75 லட்சம் ரூபாய் எனில் , பயனாளி , 27 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மீதமுள்ள , 2.48 லட்சம் ரூபாய் தாட்கோ வாயிலாக மானியமாக வழங்கப்படும். அதேபோல் , 10 எச்.பி. , 15 எச்.பி. , மின் மோட்டாருக்கு அதற்கு ஏற்றார் போல் மானியம் வழங்கப்படுகிறது.

கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,‘‘திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ளவர்கள் ஆதி திராவிடர் இனத்தை சார்ந்தவர்களாகவும் , ஆண்டு வருமானம் , 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் சொந்தமாக இருப்பதுடன் அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us